தமிழக செய்திகள்

போக்குவரத்து துறை ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை ரூ.35 லட்சம் பறிமுதல்

சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தி ரூ.35 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை எழிலகத்தில் போக்குவரத்து துறை ஆணையாளர் அலுவலகம் உள்ளது. அங்கு துணை ஆணையாளராக நடராஜன் என்பவர் பணியில் உள்ளார். அவர் அங்கு பணிபுரியும் உதவியாளர்கள் 30 பேரிடம் அவர்களின் கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் லஞ்ச தொகை வசூலித்துள்ளதாக புகார் எழுந்தது.

லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இது தொடர்பாக புகார் வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ரூ.35 லட்சம் பறிமுதல்

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று பிற்பகலில், துணை ஆணையாளர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை மாலை வரை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த சோதனை தொடர்பாக நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், துணை கமிஷனர் நடராஜன் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் கணக்கில் காட்டாத ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ரூ.35 லட்சம் ரொக்கப்பணம், உதவியாளர்களிடம் வசூலித்த லஞ்ச பணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?