கோவை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம். ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.