கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வன்கொடுமை தடை சட்ட வழக்கு: நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்க மறுப்பு

வன்கொடுமை தடை சட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துகளை யூடியூப்பில் வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து நடிகை மீராமிதுனும், அவரது நண்பரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் வன்கொடுமை தடை சட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகை மீரா மிதுனின் பேச்சு சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், மோதலை தூண்டும் விதமாக பேசும்மீரா மிதுன், இதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புலன்விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்