தமிழக செய்திகள்

எந்த நிதியாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம் அமைச்சர் ஜெயக்குமார்

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்து பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் எந்த நிதியாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம் என கூறினார். #Jayakumar

தினத்தந்தி

சென்னை

இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், தாம் ஏற்கனவே திமுகவில் இருப்பதாகவும், சினிமாவிற்கு வரும் முன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாகவும் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், முரசொலிமாறன் ஆகியோருக்காக வாக்கு சேகரித்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு, அரசியலில் இருந்து சற்று விலகி இருந்ததாக குறிப்பிட்டார். தற்போது பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் தானும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக கருதுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது ஒரு சமுத்திரம். இதில் எல்லோராலும் கரை சேர முடியாது. ஆனால் அதிமுக என்ற கப்பல் கரை சேர்ந்துவிட்டது. எனவே எந்த நிதியாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம். அந்த திராணி எங்களுக்கு உண்டு என்று கூறினார்.

#Jayakumar #UdhayanidhiStalin #TNPolitics

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்