தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

சென்னை

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷில்டு என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். முதன் முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதார பணியாளர் மணீஷ் குமாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை சுமார் 3,000 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவின் செயலியில் ஒரே நேரத்தில் அதிகளவு பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்ய முயன்றதால் சிறிது நேரம் செயலி முடங்கியது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்கான கோவின் செயலியும் சரியாக இயங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் இருவர் மட்டுமே தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இன்று 500 நபர்களுக்கு தடுப்பூசி போடவேண்டிய நிலையில் 150 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மையத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று தடுப்பூசி போடப்பட்ட 2,783 பேரும் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இன்று முதல் நாள் என்பதால் நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. நாளை முதல் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சுடன் நடைபெறும்.சென்னையில் 12 தடுப்பூசி மையங்கள் உள்ளன. இதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வைக்கப்படுகின்றன என கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்