சென்னை
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் #apjabdulkalam என்கிற ஹேஸ்டேக், இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இஅப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கூட்டமாக கூடுவதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. எனவே கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் தலைமையில் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அத்துடன் மாவட்ட நிர்வாகத்தினரும் சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.