தமிழக செய்திகள்

அப்போலோ மருத்துவமனை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஆய்வு

அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது. #ApolloHospital

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய செயலாளர் அப்போலோ மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வந்துள்ளனர்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, அவசர சிகிச்சை பிரிவு உட்பட 10 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அரவிந்தன் ஆகியோரும் ஆய்வில் பங்கேற்று வருகிறனர். மேலும் ஜெ.தீபா தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியனும் ஆய்வில் பங்கேற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...