சென்னை,
அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நேற்று நள்ளிரவில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் சி.ரெட்டி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான உடல் பரிசோதனைகளுக்கு பிரதாப் சி.ரெட்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில், முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.