தமிழக செய்திகள்

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - தினகரன்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. சசிகலா , தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறிய தினகரன்,

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். 40 தொகுதிகளிலும் சுயேட்சையாக எங்கள் வேட்பாளர் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள். அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம், குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்