தமிழக செய்திகள்

பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு வகுப்புகளில் சேர ஜுலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்

இந்த ஆண்டு 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் 1.7.2022 முதல் பெறப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் இது தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில், இந்த ஆண்டு 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளதாகவும், அந்த 10 புதிய பாடத்திட்டங்களும் குறிப்பாக வேலைவாய்ப்பை அதிகரிக்கிற வகையில், மாணவர்கள் விரும்பும் வகையில் அவை அமையவிருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து