தமிழக செய்திகள்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் - கால அவகாசம் நீட்டிப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 25-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்ட பிரிவு 12 (1) (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் 18-ந் தேதி(நாளை) முடிவடைய இருந்த நிலையில், வரும் 25-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு