தமிழக செய்திகள்

50 சதவீத மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

50 சதவீத மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிபூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு அமைய உள்ள ஜவுளிபூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய சிறிய ஜவுளிபூங்காவின் அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும் நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலைவசதி, சுற்றுசுவர், கழிவுநீர்வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சாரவசதி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைதொடர்பு வசதி போன்றவைகள்).

ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்குவசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள்.

சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான திட்டமதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட இனங்கள் ஆகும். எனவே, இந்த 3 இனங்கள் மட்டுமே அரசின் 50 சத வீத மானியத்தை பெறதகுதியான முதலீடாக கருதப்படும். மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல்துறை, சேலம் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்