தமிழக செய்திகள்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.

தினத்தந்தி

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.

கல்பனா சாவ்லா விருது

 ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

எந்த ஒரு துறையிலும் அல்லது செயல்பாட்டிலும் அசாதாரண துணிச்சல், தைரியமுடன் சிறப்பாக செயல்பட்ட ஒரு பெண்ணை தேர்வு செய்து கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை சுதந்திரதின விழா அன்று தமிழக முதல் -அமைச்சர் வழங்குகிறார்.

விண்ணப்பிக்கலாம்

எனவே, கல்பனா சாவ்லா விருது பெற இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீ விபத்துகள் ஆகியவற்றில் இருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்தல், திருட்டு மற்றும் கொள்ளை முயற்சியை தடுத்தல் போன்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தகுதியான பெண்கள் தங்கள் கருத்துருவுடன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை வருகிற 24-ந்தேதிக்குள் அணுக வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்