கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காவிரி நதிநீர் உள்ளிட்ட வழக்குகள்: சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வக்கீல்கள் நியமனம்

காவிரி நதிநீர் உள்ளிட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வக்கீல்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

காவிரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வக்கீல்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, சேகர் நாப்டே, வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.இளங்கோ, வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்