சென்னை,
தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் குமார் ஜெயந்தின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு தெருவோர கடைகள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொழிலாளர் நலவாரியத்திற்கு உறுப்பினர்களை நியமனம் செய்து அரசு உத்தரவிடுகிறது. அதன்படி, இந்த வாரியத்தின் தலைவராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் இருப்பார்.
அரசு சார்பு உறுப்பினர்களாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், தொழிலாளர் ஆணையர் முதன்மைச்செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோர் செயல்படுவார்கள்.
கடை பணியாளர்கள் தரப்பில் இருந்து 5 பேரும், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து 5 பேரும் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.