தமிழக செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

தினத்தந்தி

பொள்ளாச்சி

சுதந்திர தினத்தையொட்டி ஆன்லைன் கல்வி ரேடியோ சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கட்டுரை, பாடல்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள், தேசிய சின்னங்கள், மாநில சின்னங்கள், மாநிலங்களின் பெயர்கள், மாவட்டங்களின் பெயர்களை மாணவ-மாணவிகள் குரல் வடிவில் ஆன்லைன் கல்வி ரேடியோவிற்கு அனுப்பினர். அதன்படி பொள்ளாச்சி ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 20 பேர் மொத்தம் 200 ஆடியோக்களை அனுப்பினர். இதில் 20 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை ஒருங்கிணைத்த அறிவியல் பட்டதாரி ஆசிரியை கீதாவிற்கும் பாராட்டு சான்றிதழ் கிடைத்தது. பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதில் தமிழகத்தில் இருந்து 7 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு 15 ஆயிரம் ஆடியோக்களை தயாரித்து அனுப்பி உலக சாதனை நிகழ்விற்கு விண்ணப்பித்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்