தமிழக செய்திகள்

கப்பலில் காணாமல் போன நெல்லையை சேர்ந்த வாலிபரை மீட்க உரிய நடவடிக்கை: ஆந்திர முதல்-மந்திரிக்கு, வைகோ கடிதம்

கப்பலில் காணாமல் போன நெல்லையை சேர்ந்த வாலிபரை மீட்க உரிய நடவடிக்கை: ஆந்திர முதல்-மந்திரிக்கு, வைகோ கடிதம்.

தினத்தந்தி

சென்னை,

ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவில் வசிக்கும் மகாலட்சுமி மற்றும் மகாராஜா ஆகியோரின் மகன் வெற்றி விசுவா என்பவர் சென்னையில் உள்ள சுஜ்னா மரைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கப்பல் நிறுவனத்தில் டெக் கேடட் ஆக பணிக்கு சேர்ந்து ஆந்திர மாநிலம், கிருஷ்ணபட்டணம் எம்.வி. பென்ன சுரக்ஷா கப்பலில் பணி செய்து வந்துள்ளார்.

கடந்த 8-ந்தேதி வெற்றி விசுவா வேலைக்கு வரவில்லை என்றும், கப்பல் முழுவதும் தேடியும் காணவில்லை என்றும் பெற்றோருக்கு கப்பல் நிறுவன மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். மகன் குறித்து கவலை அடைந்த பெற்றோர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

வைகோவும், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு மின்னஞ்சல் மூலம் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வெற்றி விசுவாவை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு