தமிழக செய்திகள்

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் அர்ஜுன் சம்பத்

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் பதிவிடப்பட்டிருந்தது. காவி உடையுடன் நெற்றியில் திருநீறு அணிந்து கழுத்தில் ருத்ராட்சத்துடன் இருப்பது போன்று பதிவிடப்பட்டிருந்த அந்த புகைபடத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

திருவள்ளுவர் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்றும் அவருக்கு மதஅடையாளம் கொடுக்க முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தார்.

தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனையும் நடத்தப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்