தமிழக செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் தற்கொலை; போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு

ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்ட ஜெயலலிதா நினைவிடத்தில் போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். #Jayalalithaa #PoliceCommissioner

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரீனாவில் அமைந்துள்ளது. இங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இங்கு பணியில் இருந்த ஆயுதப்படை பிரிவை சேர்ந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார். அந்த நபர் மதுரையை சேர்ந்த அருள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த மெரீனா பகுதிக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்