தமிழக செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - வெளிநாடு செல்ல முயன்றதாக கைதான அஸ்வத்தாமன் - விசாரணைக்கு பின் விடுவிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் மீது வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

சென்னை,

பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன், பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் மீது வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் பெங்களூரு விமான நிலையம் வழியாக வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் வைத்து காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைதான அஸ்வத்தாமனை சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, அஸ்வத்தாமன் தரப்பில் உரிய பயண ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆவணங்கள் சரியாக இருந்ததை உறுதி செய்த போலீசார், நீண்ட விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்துள்ளனர்.