தமிழக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவ தளபதி நரவனே இன்று ஆய்வு

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவ தளபதி நரவனே இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

தினத்தந்தி

ஊட்டி,

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று (திங்கட்கிழமை) குன்னூருக்கு வருகிறார். பின்னர் அவர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் நரவனே பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.

பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது