தமிழக செய்திகள்

போலீசாரை தாக்கிய ராணுவ வீரர் கைது

போலீசாரை தாக்கிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்

பேரையூர்

பேரையூர் தாலுகா சலுப்பபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). இவர் ராணுவ வீரராக உள்ளார். இவர் மீது உள்ள புகாருக்காக சாப்டூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு குடிபோதையில் சென்றுள்ளார். அப்போது போலீஸ் நிலையத்தில் பாரா பொறுப்பில் இருந்த முத்துலட்சுமி என்ற பெண் போலீசை தரக்குறைவாக பேசி உள்ளார். அப்போது அங்கிருந்த ராமு என்ற போலீஸ்காரர் கண்டித்துள்ளார். அதற்கு சக்திவேல், ராமுவை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு