தமிழக செய்திகள்

ராணுவ வாகனம் ஏரியில் கவிழ்ந்து விபத்து - 2 வீரர்கள் காயம்

செங்கல்பட்டு அருகே ஏரிக்கரையில் சென்ற ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 வீரர்கள் காயமடைந்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான துப்பாக்கி சூடும் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு குடிநீர் தேவைக்காக அஞ்சூர் பகுதியில் உள்ள குழாயில் இருந்து ராணுவத்துக்கு சொந்தமான லாரியில் குடிநீரை எடுத்துக்கொண்டு அனுமந்தபுரம் நோக்கி செல்வது வழக்கம். இந்த நிலையில், வழக்கம்போல், நேற்று அஞ்சூர் ஏரியின் கரையருகே ராணுவ டேங்கர் வந்தபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ராணுவ குடிநீர் லாரியில் பயணம் செய்த 3 ராணுவ வீரர்களில் 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஞ்சூர் ஏரியில் கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை தரமற்ற நிலையில் போடப்பட்டுள்ளதால் நேற்று ராணுவ குடிநீர் லாரி விபத்துக்குள்ளானதாக ராணுவ வீரர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை