தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 40 பேர் கைதுபணம் வைத்து சூதாடிய 46 பேர் பிடிபட்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்த 40 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல பணம் வைத்து சூதாடியதாக 46 பேர் பிடிபட்டனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்த 40 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல பணம் வைத்து சூதாடியதாக 46 பேர் பிடிபட்டனர்.

கஞ்சா-குட்கா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது கந்திகுப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற மற்றும் வைத்திருந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல ஊத்தங்கரை, சாமல்பட்டி, கல்லாவி, சிங்காரப்பேட்டை, நாகரசம்பட்டி, பர்கூர், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, தளி, ராயக்கோட்டை பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் குட்கா விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி சீட்டு விற்பனை

ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

அதே போல மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தபோது பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்