தமிழக செய்திகள்

தர்மபுரி அருகேவேனில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

தினத்தந்தி

குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் உத்தரவுப்படி ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தர்மபுரி- பாலக்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வேனில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. வேனில் வந்தவரிடம் விசாரித்ததில் தர்மபுரியை சேர்ந்த சிங்காரவேலன் (வயது 43) என்பதும், கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 550 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ராமன்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்