தமிழக செய்திகள்

நாமக்கல்லில் வாலிபரிடம் நகை, செல்போன் பறிப்பு 17 வயது சிறுவன் கைது

நாமக்கல்லில் வாலிபரிடம் நகை, செல்போன் பறித்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்

தினத்தந்தி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை நெடுங்காபுலிப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவரது மகன் விஜயகாந்த் (வயது27). இவர் செல்லப்பம்பட்டி பகுதியில் மரவள்ளி கிழங்கு பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 19-ந் தேதி பணியை முடித்து விட்டு ஒரு வாரத்திற்கான சம்பளத்தை வாங்கி கொண்டு நாமக்கல் பஸ்நிலையம் வந்தார்.

இங்கு பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அவர் அணிந்து இருந்த 1 பவுன் செயின், செல்போன் மற்றும் ரூ.4,500 ரொக்கத்தை பறித்து சென்றது. இது தொடர்பாக விஜயகாந்த் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இந்த வழிப்பறி சம்பவத்தில் நாமக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை