அரூர்:
அரூர் போலீசார் சித்தேரி சாலையில் வாழை தோட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த போ.தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 54) என்பவரை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ஒரு மூட்டையை பிரித்து பரிசோதித்தனர். அப்போது அந்த மூட்டையில் 140 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றில் சில மது பாட்டில்களில் சீல் உடைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டில்களை பரிசோதித்த போது அதில் அதிக போதைக்காக ஊமத்தங்காய் சாறு கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு செல்வதும் விசாரணையில் உறுதியானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரூர் போலீசார், ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 200 மதிப்புள்ள டாஸ்மாக் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.