தமிழக செய்திகள்

மளிகை கடைக்காரர் குண்டர் சட்டத்தில் கைது

மளிகை கடைக்காரர் குண்டர் சட்டத்தில் கைது

தினத்தந்தி

ராசிபுரம்:

கொல்லிமலை மாற்றுப்பாதை அடிவாரத்தில் உள்ள முள்ளுக்குறிச்சியில் மளிகை கடை நடத்தி வருபவர் சதீஷ்குமார் (வயது 34). இவருடைய கடையில் இருந்து சுமார் 45 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடந்த மாதம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின்பேரில் கலெக்டர் ஸ்ரேயா சிங், சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சிறையில் உள்ள சதீஷ்குமாரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டதற்கான நகலை போலீசார் கொடுத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து