தமிழக செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே விவசாயியை பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது

வேப்பனப்பள்ளி அருகே விவசாயியை பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடதாரை கிராமத்தை சேர்ந்த திம்மராயன் மகன் அம்ரேஷ் (வயது 33). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் (45) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது குடிபோதையில் இருந்த மஞ்சுநாத் அவரது நண்பருடன் சேர்ந்து அம்ரேசை பீர்பாட்டிலால் தலையில் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அம்ரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்ரேஷ் அளித்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி தடதாரை கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத், முரளி (30), சிவக்குமார் (38) மற்றும் தாசப்பன் மகன் ராஜகோபால் (30) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்