தமிழக செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளி போக்சோவில் கைது

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 50). தறித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட செந்தில்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT