தமிழக செய்திகள்

கோட்டப்பட்டி அருகே17 ஆடுகளை திருடியதாக 4 பேர் கைது

தினத்தந்தி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவர் வளர்த்து வந்த 5 ஆடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானது. இதேபோல் ஆலங்கரை பகுதியை சேர்ந்த வேட்டைராஜ் வளர்த்து வந்த 7 ஆடுகள், புதுக்கோட்டை சரடு கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் வளர்த்து வந்த 5 ஆடுகள் திடீரென மாயமாகின.

மொத்தம் 17 ஆடுகள் மாயமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரின்பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை அமைத்து ஆடு திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (வயது 23), அஜித் (22), மச்ச கண்ணன் (21), நரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாரப்பன் (55) உள்ளிட்ட 5 பேர் ஆடு திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் மேற்கண்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்