தமிழக செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகேமது போதையில் நண்பரை தாக்கியவர் கைது

வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமானப்பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (32). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 26-ந் தேதி அந்த பகுதியில் உள்ள கோவில் அருகில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் கல்லால் ஸ்ரீகாந்தை தாக்கினார். இதில் காயம் அடைந்த ஸ்ரீகாந்த் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்