தமிழக செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் தாலுகாவை சேர்ந்தவர் டேனியல் மனோஜ் பிரிட்டோ(வயது 30). இவர், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பாலவாக்கம், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது(38) என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்காக நேர்காணல், மருத்துவ பரிசோதனை என டெல்லி, வாரணாசி ஆகிய இடங்களுக்கு அழைத்துசென்று போலியான பணிநியமன ஆணை, அடையாள அட்டைகளை வழங்கினார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் ரூ.24 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி இருந்தார். இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்