தமிழக செய்திகள்

வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடந்த 19-ந்தேதியும், 9, 10-ம் வகுப்புகளுக்கு நேற்று முன்தினமும் வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு பள்ளி அளவில் 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார அளவில் போட்டிகள், அந்தந்த வட்டாரங்களில் நேற்று நடைபெற்றன. அவர்களுக்கு காண்கலை, நுண்கலையில் ஓவியம் வரைதல், இசை, கருவியிசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட 9 விதமான கலை போட்டிகள் நடைபெற்றன.

இந்த கலை திருவிழா போட்டிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வட்டார அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மாவட்ட அளவிலும், அதில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து