தமிழக செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்:வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது

தினத்தந்தி

தமிழகம் முழுவதும் ரூ.1,000 மகளிர் உரிமைதொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வீடு, வீடாக வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்திலும் ரேஷன்கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை வழங்கினர்.

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்துக்காக முதல்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடக்கிறது. இம்முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடக்கிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் முகாம்களுக்கு சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்