தமிழக செய்திகள்

கோடை விடுமுறைக்கு பின் கலை, அறிவியல் கல்லூரிகள் வரும் 18-ம் தேதி திறப்பு - கல்லூரிக் கல்வி இயக்ககம்

கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடந்து முடிந்தது. செமஸ்டர் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தலின் படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2021-2022-ம் கல்வியாண்டின் கோடை விடுமுறைக்கு பின், வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-23-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும். இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்துவித கல்லூரிகளின் முதல்வாகளும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை