தமிழக செய்திகள்

ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது தாக்குதல்: மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

ஆறுகாட்டுத்துறை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர் தாக்குதலை கண்டித்து மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மகன்கள் சிவா, சிவக்குமார். மீனவர்களான இவர்கள் 3 பேரும் கடந்த 24-ந்தேதி இரவு கடலில் கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி, இரும்பு பைப்பு உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்கள் 3 பேரையும் சரமாரியாக தாக்கி அவர்களிடம் இருந்து 300 கிலோ வலை, டார்ச்லைட், வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் சிவக்குமார், சிவா, சின்னதம்பி ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் நேற்று முன்தினம் காலை இவர்கள் கரை திரும்பினர். இதை தொடர்ந்து காயம் அடைந்த 3 மீனவர்களும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு

ஆறுகாட்டுத்துறை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து நேற்று 2-வது நாளாக ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலை நிறுத்த போராட்டத்தால் 500-மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதி நேற்று வெறிச்சோடி கிடந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு