தமிழக செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 5 மாதங்கள் நீட்டிப்பு..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் மேலும் 5 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை:

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.

சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணை முடிவடையாத நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு சுப்ரீகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. எனவே, மேலும் 5 மாத காலம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 12வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை