தமிழக செய்திகள்

காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-32.54 % நாங்குநேரி-23.89% வாக்குப் பதிவு

காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 32.54%, நாங்குநேரி தொகுதியில் 23.89% வாக்குகள் பதிவாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 12.84 சதவீதம் வாக்குகளும், நாங்குநேரியில் 18.04 சதவீதம் வாக்குகளும் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 9.66 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

புதுச்சேரியில் காலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வாக்கு சாவடிகளுக்கு மக்கள் குறைவாக வருகை தந்துள்ளனர். இதனை முன்னிட்டு காலை 9 மணிவரை மிக குறைவான அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11.00 மணி நிலவரப்படி 32.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாங்குநேரி தொகுதியில் காலை 11.00 மணி நிலவரப்படி 23.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 28.17% வாக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை