தமிழக செய்திகள்

மீன், இறைச்சிக்கு மக்கள் அலைமோதியதால் கோயம்பேட்டில் காய்கறி விலை மலிவு

மீன், இறைச்சிக்கு மக்கள் அலைமோதியதால் கோயம்பேட்டில் காய்கறி மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் வெகு குறைவாகவே காணப்பட்டது. இதனால், காய்கறிகளும் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

பெரிய வெங்காயம் 3 கிலோ ரூ.100-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், முள்ளங்கி, முருங்கைக்காய், உருளைகிழங்கு தலா கிலோ ரூ.40-க்கும், கேரட், தக்காளி, முட்டைக்கோஸ் தலா கிலோ ரூ.30-க்கும், புடலங்காய், சுரைக்காய் தலா ரூ.20-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இருந்த போதிலும், போதிய கூட்டம் இல்லாததால், விற்பனை மந்தமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்