கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகிறது "அசானி"

அசானி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் அசானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது. இந்தப் புயல் ஒடிசா, ஆந்திராவில் கரையைக் கடக்காது என்றும் மாறாக கடற்கரையை ஒட்டியே நகர்ந்து சென்று வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும்போதும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அசானி புயல் காரணமாக சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு