தமிழக செய்திகள்

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை

விழுப்புரம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

விழுப்புரம் அருகே உள்ள ராகவன் பேட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்சுரேந்திரன்(வயது 35). இவருக்கும் ஓவியா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கணவர் மற்றும் மாமனார் ராஜேந்திரன்(60), மாமியார் சுமதி(57) ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஓவியா புகார் கொடுத்தார். அதன் பேரில் ராஜ் சுரேந்திரன் உள்பட 3 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு