தமிழக செய்திகள்

பெண் மீது தாக்குதல்; கணவர் கைது

நெல்லை அருகே பெண்ணை தாக்கியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் சுபாஷ் சங்கர் (வயது 26). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பட்டம்மாள் என்ற செல்வி (25). சுபாஷ் சங்கர் சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்பாது சுபாஷ் சங்கர் தனது மனைவி செல்வியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அதை தடுக்க வந்த செல்வியின் தாயார் ராணியையும் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த செல்வி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாஷ் சங்கரை கைது செய்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு