சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் மூலமும், அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டதால் 1 முதல் 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அற்ற தேர்வு தேர்ச்சி முறை அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
அதன்படி தற்போது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. நடுநிலை வகுப்புகளான 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2022 ஜனவரி 5 ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளதுள்ளார்.
இதற்கான அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பட்டுள்ளது. இந்த தேர்வு 5 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மதிப்பீட்டு தேர்வு கால அட்டவணை;-
05.01.2022 தமிழ் மொழித்தேர்வு
06.12.2022 ஆங்கில மொழித் தேர்வு
07.12.2022 கணிதம்
08.12.2021 விருப்ப மொழிப்பாடம்
10.12.2022 அறிவியல்
11.12.2021 சமூக அறிவியல்