தமிழக செய்திகள்

தூத்துக்குடி அருகே காவல் உதவி ஆய்வாளர் வேன் ஏற்றிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேன் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரக்கு வேன் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதவி ஆய்வாளர் பாலு, கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது போதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்ற நபரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த முருக வேல் சரக்கு வேனை எடுத்து வந்து எஸ்.ஐ பாலுவை கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.

வேன் ஏற்றி உதவி ஆய்வாளரை கொன்ற முருகவேலை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து