தமிழக செய்திகள்

அந்தியூர் கால்நடை சந்தையில்காங்கேயம் காளைமாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளைமாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.

அந்தியூர்

அந்தியூரில் நேற்று கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த கால்நடை சந்தைக்கு சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, எடப்பாடி, தர்மபுரி மற்றும் பர்கூர், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் காங்கேயம் காளை மாடு ஜோடி ஒன்று குறைந்தபட்சமாக ரூ.1 லட்சத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதேபோல் கொங்கு காளை மாடு ஜோடி குறைந்தபட்சமாக ரூ.75 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், நாட்டு பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசுமாடு ஒன்று ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரத்துக்கும், சிந்து பசுமாடு ஒன்று ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரத்துக்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி ஒன்று ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரத்துக்கும், அதன் கன்று குட்டி ஒன்று ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கோவை, பெருந்துறை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை பிடித்து சென்றனர்.