தமிழக செய்திகள்

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் 2-ம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் குறித்து உதவி மையம்

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் 2-ம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் குறித்து உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலை காவலர் (போலீஸ்), சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான பொதுத்தேர்வுக்கு இணைய வழி விண்ணப்பம் செய்வதற்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. https://www.tnusrb.tn.gov.in/cronlinerecruitment.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இயங்கி வரும் உதவி மையத்தை நேரிலோ அல்லது 7305984100 என்ற செல்போன் எண்ணை தொடர்புகொண்டோ விளக்கம் பெறலாம். இந்த உதவி மையம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்