தமிழக செய்திகள்

ஈரோட்டில்மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா

தினத்தந்தி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் உரிமைகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆண்ட்ரூஸ்பாபு தலைமை தாங்கினார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, கோர்ட்டு, கல்வித்துறை உள்ளிட்ட பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் கூறும் குறைகள், கருத்துகளை அலுவலர்களும், அவர்கள் கூறும் பதில்களை நாங்களும் புரிந்து கொள்ள முடியும். எனவே மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி சைகை மொழி பெயர்ப்பாளரை அரசு அலுவலகங்களில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

செயலாளர் சகாதேவன், பொருளாளர் ராஜூ மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்