தமிழக செய்திகள்

எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை

எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

எட்டயபுரம்:

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை நேற்று பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமை தாங்கினார. நெசவாளர் மாவட்ட பிரிவு துணைத் தலைவர் நாகராஜன், ஒன்றிய தலைவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எட்டயபுரத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி விளையாட்டு மைதானத்தை மராமத்து செய்யக்கோரி இந்த போராட்டம் நடந்தது. ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஹரிஹரசுதன், காளிராஜ், ஆன்மீக பிரிவு மாவட்ட துணை தலைவர் ராஜாராம், ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன், ஒன்றிய மகளிர் அணி தலைவி கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை எட்டயபுரம் தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசுப்ரமணியனிடம் வழங்கினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதன் பேரில், அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு