கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடமலைக்குண்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அழகு சிங்கம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். முடிவில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.